ஆசிரியை குறித்து அவதூறாக எழுதி சிக்கிய 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி
நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே ஆசிரியை குறித்து அவதூறாக பள்ளி கழிப்பறையில் எழுதி வைத்ததற்காக டிசி கொடுக்கப்பட்டனர் 6 மாணவர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 பேரும் பிளஸ் ஒன் மாணவர்கள் ஆவர். பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளிக்கூட கழிப்பறையில், பள்ளி ஆசிரியர் ஒருவரையும், ஆசிரியை ஒருவரையும் இணைத்து ஆபாசமாக எழுதி வைத்திருந்தனர்.
மேலும் வகுப்பறை மற்றும் ஸ்டாப் ரூமிலும் இவர்கள் எழுதியுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினர். தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியபோது பிளஸ் ஒன் படித்து வந்த 6 மாணவர்கள்தான் இதைச் செய்தது என்று தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆறு மாணவர்களின் பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் டிசி கொடுக்கப்படுவதாகவும், அதைப் பெற்றுக் கொண்டு பள்ளியை விட்டு செல்லுமாறும் தலைமை ஆசிரியர், பள்ளித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு ஆறு மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்க்கை வீணாகி விட்டதே என்று அதிர்ந்த அவர்கள் கடைக்குப் போய் எறும்புப் பவுடரை வாங்கி வந்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டனர். இதையடுத்து ஆறு பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஆறு பேரும் தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications