மொய்விருந்து: ஏ.டி.எம் ஐ நிரப்பிவைங்கப்பா… புதுக்கோட்டை வாசிகள் கோரிக்கை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தற்போது மொய் விருந்து நடைபெறும் காலம் என்பதால் அனைத்து வங்கிகளும் தங்களது ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பி வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், மேற்பனைக்காடு, கொத்தமங்களம், குளமங்களம், மாங்காடு, வடகாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வருடா வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொய் விருந்து நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும். வருடா வருடம் இது தவறாமல் நடத்தப்படுகிறது.
விருந்து நிகழ்ச்சிகள் அதிக அளவில் இந்த சமயத்தில் நடக்கும் என்பதால் அரிசி, பருப்பு உள்ளிட்டமளிகை சாமான்களின் விற்பனை அதிகமாக இருக்கும். மேலும் ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவற்றின் விற்பனையும் அதிகமாக இருக்கும்.
விருந்துக்கு வருவோர், சாப்பிட்டு விட்டு மொய் எழுதிச் செல்வார்கள். தினசரி சராசரியாக ரூ. 1 கோடி வரை இந்தப் பகுதிகளில் மொய்ப் பணம் சேரும் என்கிறார்கள்.
இந்த மொய் விருந்தில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியாது. காரணம், ஒருவர் வைத்த மொய் விருந்துக்கு வந்தவர்கள் வைக்கும் விருந்துகளுக்குக் கட்டாயம் போய் அவர்கள் எழுதியதை விட கூடுதலாக எழுத வேண்டும் என்பதால். இதனால் பலர் இந்த மொய் விருந்துக்காக முன்கூட்டியே சேமித்து வைப்பதும் உண்டு.
ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகத்தான் மக்கள் மொய் விருந்துக்குத் தேவையான பணத்தை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் தீர்ந்து போய் விடுவதால் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே மொய்க்கால் முடியும் வரை ஏடிஎம் மையங்களில் பணம் தீராத வகையில் இருப்பு வைத்துக் கொள்ளுமாறு வங்கிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications