தூத்துக்குடியில் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ரம்ஜான் நோன்புபெருநாள் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

முஸ்லிம் பெருமக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ரம்ஜான் நோன்புபெருநாள் பண்டிகை முக்கியமானதாகும். நாடு முழுவதும் இன்று நோன்பு பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் சார்பில் தூத்துக்குடி ஈத்கா தோட்டத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல்அழிம்ஆலிம் மஸ்லஹி தொழுகை நடத்தினார். தொழுகையில் 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை இனிப்பு கொடுத்து பகிர்ந்து கொண்டனர்.

இதேபோன்று மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டணம், கேம்லாபாத், செய்துங்கநல்லூர், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை, ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் சிறப்புத்தொழுகை நடந்தது.

Ramzan celebrated with eager in Tuticorin dt
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+