For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்மோகன் சிங்கைச் சந்திக்க விரும்புகிறேன்.. நவாஸ் ஷெரீப் விருப்பம்

Google Oneindia Tamil News

Want to meet PM in New York, says Nawaz Sharif; India unsure
கோலாப்பூர்: இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவத்தினர் படுகொலை செய்த சம்பவத்தால் இந்தியாவில் கொதிப்பு ஏற்பட்டுள்ள பின்னணியில், பிரதமர் மன்மோகன் சிங்கை நியூயார்க்கில் சந்திக்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் மீதும், நிலைகள் மீதும் பாகிஸ்தான் படையினர் தன்னிச்சையாக நடத்திய தாக்குதலால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. இதையடுத்து நிலைமையை சுமூகமாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு இறங்கியுள்ளது.

குறிப்பாக பிரதமர் நவாஸ் ஷெரீப், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கைக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் இரு தரப்பும் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வீரர்கள் பலியாகியிருப்பது வருத்தம் தருகிறது. இந்த சிக்கலான நேரத்தில் இரு நாடுகளும் போர்நிறுத்த உடன்படிக்கையை முறையாக கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமாகும்.

செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐநா. பொதுச் சபைக் கூட்டத்திற்கு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்துப் பேச விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பு குறித்து கருத்துக் கூற இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்து விட்டது.

English summary
Pakistani Prime Minister Nawaz Sharif tried Thursday to ease tensions with India by urging both sides to work swiftly to shore up a 10-year ceasefire threatened by recent attacks. In a statement released by his office, Mr Sharif expressed his sadness over the loss of life and said it was "imperative" for India and Pakistan to take "effective steps to ensure and restore" the truce. He made the remarks shortly after Defence Minister AK Antony for the first time directly accused Pakistan's army of involvement in an ambush that killed five Indian soldiers on Monday in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X