இலக்கு '272' இடங்கள்... இளைஞர்களை ஈர்க்க பாஜக புதிய இணைய தளம் அறிமுகம்!

பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியினர் தகவல் தொழில்நுட்பத் துறையை முழு வீச்சாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சமூக வலைதளங்களை ஒரு சக்திவாய்ந்த ஊடகமாக மோடியும் கருதக் கூடியவர். இதனாலேயே தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக எப்படியெல்லாம் பிரசாரம் செய்வது என்பதற்காகவே ராஜ்யசபா எம்.பியும் பாஜகவின் பொருளாளருமான பியூஸ் கோயலை நியமித்திருக்கிறார். அண்மையில் டெல்லியில் லோக்சபா தேர்தலில் 272 இடங்களைக் கைப்பற்றுவதற்காக தகவல் தொழில்நுட்பத் துறையை எப்படியெல்லாம் பயன்படுத்துவது என்பதற்கான விரிவான ஆலோசனைக் கூட்டத்தையும் பாஜக நடத்தியிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது http://www.india272.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்துக்கு உதவக் கூடிய தன்னார்வ தொண்டர்களுக்கு என தனிப்பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தன்னார்வ தொண்டர்களுடன் களமிறங்கும் இந்த இணையதளமானது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தன்னார்வ தொண்டர்களை இணைப்பது என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதேபோல் நாளை ஹைதராபாத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட விவரங்களை முழுமையாக http://www.india272.com இணையதளத்தில் காண முடியும்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications