ஐயா, கேப்டனை உதறிவிட்டு திமுகவில் இன்று இணையும் பாமக, தேமுதிக நிர்வாகிகள்

காஞ்சீபுரம் மாவட்ட பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி இன்று திமுகவில் சேர்கின்றனர். இன்று மாலை மறைமலை நகரில் நடக்கும் விழாவில் அவர்கள் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்பு திமுகவில் இணைகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து, கட்சி உறுப்பினர் அட்டைகளை ஸ்டாலின் வழங்கி உரை நிகழ்த்துகிறார்.
இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பாமக துணைத் தலைவருமான து.மூர்த்தி மற்றும் தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளில் இருந்து மாற்றுக் கட்சியினர் தி.மு.கழகத்தில் இணையும் மாபெரும் விழா மறைமலைநகர் அண்ணா திடலில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறுகிறது.
திமு கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் து. மூர்த்தி, தேமுதிக பிரமுகர் தமிழ்வேந்தன் மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைகிறார்கள்.
இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தரும் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, ஆலந்தூர் கத்திப்பாரா சந்திப்பில் இருந்து மறைமலைநகர் வரை கொடி- தோரணங்கள் வழி நெடுகிலும் அழகு பட அமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பதாகைகளும் வழியெங்கும் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications