‘கொய்யா’ திருடிய 6 வயது சிறுமி: கைது செய்ய வற்புறுத்திய தாத்தா-பாட்டி
ஜெய்ப்பூர்: வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கொய்யாப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 6 வயது சிறுமியைக் கைது செய்யச் சொல்லி வற்புறுத்திய வயதான தம்பதிகளால் ராஜஸ்தான் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான், கோத்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதி நகரில் வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர். சமீப காலமாக அவர்களது தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கொய்யாப் பழங்கள் மாயமாகி வந்தன.
திருடனைக் கையும், களவுமாக பிடிக்க நாள் பார்த்து வந்தனர். ஒருநாள் 6 வயது சிறுமி ஒருவர் சுவர் ஏறிக் குதித்து தோட்டத்திற்குள் புகுந்ததைக் கண்டனர் அவர்கள். உடனடியாக ஓடிச் சென்று அச்சிறுமியைக் கையும் களவுமாக கொய்யாப் பழக்களோடு பிடித்து விட்டனர்.
உடனடியாக அச்சிறுமியின் வீட்டைச் சோதனையிட்ட அவர்கள் அங்கிருந்து மற்றொரு கொய்யாவைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர், அச்சிறுமியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்தினர்.
7 வயதுக்கு குறைவான குழந்தைகளை கைது செய்ய இயலாது என எவ்வளவோ போலீசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து பிடிவாதம் பிடித்துள்ளனர் அத்தம்பதி. பின்னர் ஒருவழியாக அச்சிருமியை அவர்களிடமிருந்து காப்பாற்றி அவளாது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் போலீசார்.
சிறுமியை அவளது முடியைப் பிடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்து வந்த அத்தம்பதியரின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். கொய்யாவிற்கு கொடுத்த மதிப்பைக் கூட 6 வயது சிறுமிக்குத் தரவில்லையே என அச்சிறுமியின் பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications