'வானிலை' ரமணன் யூகம் பொய்யானதே! சென்னையில் விடாம மழை!! தவிக்கும் சென்னைவாசிகள்!!
சென்னை: தென்சீன கடலில் உருவான புயலானது தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மழையை உள்வாங்கிக் கொண்டதால் மழைக்கு வாய்ப்பு குறைவு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்த முன்னோட்ட அறிக்கை வழக்கம் போல பொய்யாகிப் போனது. சென்னை நகரில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்தும் நீடிப்பதால் தவித்துப் போயுள்ளனர் சென்னைவாசிகள்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தென் சீனக் கடற்பரப்பில் புயல் உருவாகி இருக்கிறது. தமிழகத்துக்கான மழையை அந்த புயல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 2 நாட்களாக மழை கிடைக்கவில்லை.

சென்னையில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
ஆனால் வழக்கம் போல வானிலை ஆய்வு மைய அறிக்கை பொய்யாகிப் போவதைப் போலவே தற்போதும் நடந்துவிட்டது.
சென்னை நகரில் நேற்று நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்தும் விடாமல் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் வெளுத்துக் கொட்டாமல் மிதமான மழையாகவே நீடிப்பதால் சாலைகள் சகதிக் காடாக காட்சியளிக்கின்றன.
இந்த கொட்டும் மழையிலும் பள்ளிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கொட்டும் மழையோடு பள்ளிக்குப் போன குழந்தைகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்ப வேண்டிய நிலை. தொடரும் மழையால் சென்னை நகரில் மழையால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிகரித்திருக்கிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications