இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு: பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி பிரணாப் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை:

பொறுமைக்கும் எல்லை உண்டு
அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நிலையான அரசு
அடுத்த ஆண்டு தேர்தல் மூலம் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நெருங்கி வருகிறது. இந்த வாய்ப்பை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நிலையான அரசு ஏற்படச் செய்ய வேண்டும். மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
சமூக நல்லிணக்கம், அமைதி, வளர்ச்சியை நோக்கி நாம் பயணம் செல்கையில் ஒவ்வொரு தேர்தலும் நமக்கு முக்கியமானதாகும். மீண்டும் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனநாயகம் நமக்குத் தந்துள்ளது. அந்த வாய்ப்பை நாம் வீணாக்காமல் துணிச்சலுடனும், மன உறுதியுடனும் செயல்பட்டு நமது பெருமைகளைக் கட்டிக்காக்க வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டம் பல்வேறு அமைப்புகளுக்கும் பல்வேறு விதமான அதிகாரங்களை வழங்கியுள்ளன. இவற்றை நாம் ஒரு சீராகக் கொண்டு செலுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி நமக்கு அகிம்சை, சுயக்கட்டுப்பாடு அடிப்படையிலான சுயாட்சியை வலியுறுத்தியுள்ளார். அவரது போதனைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதால்தான் நமது நாடு ஏறக்குறைய 70 ஆண்டுகளாக ஜனநாயக நாடாக நிலைப் பெற்று வருகிறது.
மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றம், நீதிமான்கள் இடம்பெற்றுள்ள சுதந்திரமான நீதித்துறை, தவறு நடந்தால் அதைச் சுட்டிக்காட்ட பத்திரிகைகள், எப்போதும் விழிப்புடன் இருக்கும் மக்கள், திறமையான அதிகாரிகள் ஆகியோரால்தான் ஜனநாயகம் தழைத்து வருகிறது என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications