மோசடி புகாரில் கைதான சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக "தலைவன்" படக் கதாநாயகன் பாஸ்கரன் மீது தியாகராய நகரை சேர்ந்த பிரகாஷ் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரனை கடந்த ஜூலை 7ஆம் தேதி கைது செய்தனர். மற்றொரு வழக்கிலும் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஸ்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால் தற்போது பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனாலும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் சித்திரைச்செல்வன் மீதுதான் பிரதானமான மோசடி குற்றச்சாட்டு உள்ளது. எனவே பாஸ்கரனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவர் சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.1 லட்சத்துக்கான ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீசில் 2 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும் நாட்களில் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications