For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் முஸ்லீம்கள் ஓட்டுப் போடுகிறார்கள்.. ஏன் மற்றவர்கள் போட மாட்டார்கள்.. மோடி கேள்வி

Google Oneindia Tamil News

25% Muslims in Gujarat vote for BJP, why not rest of country?' Modi tells party members
டெல்லி: குஜராத்தில் வசிக்கும் 25 சதவீத முஸ்லீம்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து வரும்போது, நாட்டின் இதரப் பகுதிகளில் உள்ள முஸ்லீம்களை ஏன் நம் பக்கம் இழுக்க முடியாது என்று கேட்டுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அவர் கட்சியினர் மத்தியில் பேசுகையில், முஸ்லீ்ம்கள் உள்பட நாட்டின் அத்தனை சமுதாயத்தினரையும் கவரும் வகையில் பாஜக செயல்பட வேண்டும்.

குஜராத்தில் 20 முதல் 25 சதவீத முஸ்லீம்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். அவர்களது மனங்களை நாம் வென்றுள்ளோம். அப்படி இருக்கும்போது நாட்டின் இதர பகுதிகளிலும் நாம் ஏன் இதைச் செய்ய முடியாது. நிச்சயமாக அது முடியும்.

இளைஞர்களையும், முதல் முறையாக வாக்களிக்கப் போவோரையும் கவரும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். மாற்றம் தேவை என்பதை அவர்களது மனதில் நாம் விதைக்க வேண்டும் என்றார் மோடி.

English summary
At a brainstorming session to finalise campaign elements for the Assembly elections in four crucial states and general elections, Narendra Modi urged the BJP to reach out to all groups across the country, including Muslims. "In Gujarat around 20-25 per cent Muslims voted for the BJP and we need to reach out to them and other sections of the society in the rest of the country also," Mr Modi said during the meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X