ஏர் ஏசியா ரெடி.. நீங்க ரெடியா?

ஆசிய அளவில் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனம்தான் மலேசியாவின் ஏர் ஏசியா. இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் ஏசியாவும் இந்தியாவில் கால் பதித்தது.
டாடா குழுமத்துடன் இணைந்து ஏர் ஏசியா இந்தியவில் குறைந்த கட்டண சேவையை தொடங்க முடிவு செய்து ஒப்பந்தமும் கையெழுத்தானது. தற்போது நவம்பர் மாதம் முதல் சேவையை ஏர் ஏசியா தொடங்க உள்ளது.
இதற்காக 2 விமானங்களை இயக்குவதற்கான விமானிகள், பொறியாளர்கள், விமான சேவை குழுவினர் என பலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏர் ஏசியாவின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மிட்டு சாண்டில்யா, விமான சேவை மார்க்கம், புறப்பாடு மற்றும் சென்றடைதல் நேரங்கள், செயல்படும் இடம் என அனைத்தும் தயாராக உள்ளது. நவம்பர் மாதம் எங்களது விமான சேவை தொடங்கிவிடும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஏர் ஏசியாவின் தலைமை நிதி அதிகாரியாக விஜய் கோபாலன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Ernst & Young நிறுவன கணக்கு தணிக்கையாளராக இருந்தவர். இதேபோல் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைமை அதிகாரியாக கோ ஏர் நிர்வாகியாக இருந்த நதீம் பத்ரிகான் நியமிக்கப்பட்டுள்ளார். பொறியாளர் குழுவின் தலைவராக கஜபதி சம்பத் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
விமான சேவைகளுக்கான இயக்குநராக கேப்டன் அமித்சிங், தகவல் தொடர்புத் துறைக்கு நேகா மொகந்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 90 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏர் ஏசியாவுக்கான விமானிகள் கிங்பிஷர் மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து எடுக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இண்டிகோ, கோ ஏர் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களில் இருந்து விமானிகளை ஏர் ஏசியா பணிக்கு எடுக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications