பீகாரில் ரயில் மோதி பலியானோர் எண்ணிக்கை 37 ஆனது! பெட்டிகள் தீ வைத்து எரிப்பு!!
பாட்னா: பீகார் மாநிலத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யாத்ரீகர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சக யாத்ரீகர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பீகாரின் தாமரா ரயில் நிலையத்தில் சாஹர்சா மாவட்டத்தில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக உள்ளூர் ரயில் ஒன்றில் இருந்து யாத்ரீகர்கள் குழுவினர் இறங்கியுள்ளனர். பின்னர் மற்றொரு ரயிலுக்காக தண்டவாளம் அருகேயே சிலர் காத்திருந்தனர். மேலும் சிலர் தண்டவாளத்தைக் கடக்கவும் முயற்சித்துள்ளனர்.

அப்போது சாஹர்சாவிலிருந்து பாட்னா நோக்கி நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மற்றும் தண்டவாளத்தைக் கடக்க முயன்றோர் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பலரது உடல் துண்டு துண்டாக சிதறியது. பலரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில காவல்துறை அதிகாரி எஸ்.கே. பரத்வாஜ், ரயில்வே தண்டவாளத்தை சிலர் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்ட ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிலர் தீ வைத்துள்ளனர். அப்பகுதிக்கான சாலை போக்குவரத்து மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 37 பேர் வரை பலியாகி இருப்பதாக கூறப்பட்டாலும் உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை என்றார்.

தற்போது இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே இச்சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரயில்வே நிர்வாகம் தலா ரூ10 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications