For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஹமீத் உத்தரவுப்படி செயல்பட்டேன்: துண்டா ஒப்புதல் வாக்குமூலம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் முன்னாள் தலைவர் ஹமீத் குல்தான் தமக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்று பிடிபட்ட தலைமறைவு தீவிரவாதி சையத் அப்துல் கரீம் என்ற துண்டா ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இந்திய- பாகிஸ்தான் எல்லையில் வெள்ளிக்கிழமையன்று டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் துண்டா கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் போது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் தமக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை அறிமுகப்படுத்தியது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.க்கும் தீவிரவாதிகளுக்குமான தொடர்பு பற்றிய ஏராளமான தகவல்களை துண்டா போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதையெல்லாம் விவரித்தும் இருக்கிறார். அப்போதுதான் தாம் ஐ.எஸ்.ஐ. முன்னாள் தலைவர் ஹமீத் குல் தமக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தார் என்ற உண்மையையும் துண்டா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

English summary
In a sensational disclosure, arrested terrorist Syed Abdul Karim alias Tunda on Monday revealed that the former ISI chief Hamid Gul was his "handler".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X