அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் வயிற்றுக்குள் 3 கையுறைகளை வைத்து தைத்த அரசு மருத்துவர்கள்

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியை அடுத்து உள்ளது குடிசல். இந்த கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆலந்துரையார் கட்டளையைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகள் சுமதியை ஒரு ஆண்டுக்கு முன்பு மணந்தார். கர்ப்பிணியான சுமதி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த அவருக்கு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் சுமதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுமதிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதில் இருந்தே சுமதியால் சரியாக சாப்பிட முடியவில்லை, மலம் கழிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலம் கழிக்கையில் கையுறை வெளியே தெரிந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சுண்டக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விவரத்தை தெரிவித்தார். அவரை பரிசோதித்தபோது அரியலூர் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்கையில் 3 கையுறைகளை அவரின் வயிற்றுக்குள் வைத்து தைத்தது தெரிய வந்தது. இதையடுத்து சுகாதார நிலைய மருத்துவர்கள் அந்த 3 கையுறைகளை வெளியே எடுத்துவிட்டு சுமதிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications