கேடு கெட்ட அண்ணன்... தங்கையைச் சீரழித்து கொலையும் செய்த கொடுமை!
கோவை: நெஞ்சைப் பதற வைக்கும் கொடுஞ்செயல் கோவையில் நடந்துள்ளது. உடன் பிறந்த தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன், பிறகு அவரை கொலை செய்துள்ளார்.
கோவையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் ரவி., 25 வயதாகும் இவர் டிரைவராக உள்ளார். இவரது தங்கை பெயர் கல்பானா. 20 வயதாகிறது. தையல் பயிற்சி வகுப்புக்குப் போய் வந்து கொண்டிருந்தார்.
வெள்ளிக்கிழமையன்று தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் கல்பனா. போலீஸுக்குத் தகவல் போய் அவர்கள் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையில், கல்பனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து கற்பழிப்பு மற்றும் கொலை வழக்காக இது மாற்றப்பட்டது.
முதலில் விஸ்வநாதன் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரவியின் பேச்சில் முரண்பாடு தெரிவதைப் போலீஸார் கண்டுபிடித்னர். இதையடுத்து அவரை மட்டும் தனியாக கொண்டு போய் தீவிரமாக விசாரித்தனர். அப்போதுதான் அந்த படு பாதகத்தை வெளியிட்டார் ரவி.
கூடப் பிறந்த தங்கை என்றும் பாராமல் கல்பனாவை இவர் தான் சீரழித்துள்ளார். பின்னர் கொலையும் செய்துள்ளார். இதுதொடர்பாக போலீஸாரிடம் ரவி அளித்த வாக்குமூலத்தில்,
நான் டிரைவராக பணியாற்றி வருகிறேன். எனக்கு செக்ஸ் மோகம் அதிகம். வீட்டில் இரவு தூங்கும்போது தங்கை கல்பனா அருகில் தூங்குவாள். அப்போது எனது கைகளை அவள் மீது தூக்கத்தில் போடுவதுபோல் நடித்தேன். தங்கை என்றும் பாராமல் அவளை அடைய வேண்டும் என்று நினைத்தேன்.
நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தேன். அப்போது வீட்டில் கல்பனா மட்டும் தனியாக இருந்தாள். நான் கட்டிலில் சென்று படுத்தேன். கல்பனா வீட்டை சுத்தம்செய்து கொண்டிருந்தாள். அதனை பார்த்த உடன் அவளை அடைய வேண்டும் என்று கட்டிப்பிடித்தேன். உடனே அவள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட ஆரம்பித்தாள்.
உடனே அவளை கீழே தள்ளி வாயை பொத்தினேன். இதில் அவள் மயங்கினாள். பின்னர் உல்லாசம் அனுபவித்தேன். பின்னர் கல்பனாவின் முனகல் சத்தம் கேட்டது. மயக்கம் தெளிந்தால் நடந்த விபரத்தை வெளியே கூறி விடுவாள் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதனால் அவளை கொலை செய்ய முடிவு செய்து கழுத்தை நெறித்து கொலை செய்தேன். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல் தங்கை இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.
அவர்கள் வீட்டுக்கு வந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். போலீசார் முதலில் கல்பனா சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை எடுத்துச் சென்றனர். இதனால் நாம் தப்பித்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் செய்த துரோகம் பிரேத பரிசோதனையில் என்னை காட்டிக் கொடுத்து விட்டது என்று கூறியுள்ளார் ரவி.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications