For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக வலியுறுத்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

AIADMK, DMK say PM should not attend Commonwealth Summit in Sri Lanka
டெல்லி: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற லோக்சபாவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி டி.கே.எஸ். இளங்கோவன், கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமரோ அல்லது வேறு எந்த ஒரு பிரதிநிதியுமோ கலந்து கொள்ளக் கூடாது. அப்படி கலந்து கொள்வது என்பது தமிழகத் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாகும். இலங்கை அரசு ஒரு இனப்படுகொலை செய்துள்ள அரசு. மனித உரிமைகளை மீறியுள்ளது. அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றார்.

இதேபோல் அதிமுக எம்.பி. தம்பிதுரை பேசுகையில், காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார். அதை ஏற்று கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றார்.

ராஜ்யசபாவில் நேற்று திமுகவின் கனிமொழி, அதிமுகவின் மைத்ரேயன் ஆகியோரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK and DMK on Tuesday joined hands in Lok Sabha to demand that Prime Minister Manmohan Singh should not attend Commonwealth Summit in Sri Lanka in November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X