Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்குள் ரூ. 1,600 கோடி கள்ள நோட்டுகள்: ஐஎஸ்ஐ உதவியுடன் புழக்கத்தில் விட்ட தாவூத் இப்ராஹிம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுடன் ஆண்டுதோறும் இந்தியாவுக்குள் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விட்டுவருவதாக லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துன்டா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

70 வயதான அப்துல் கரீம் துன்டாவை, கடந்த வாரம் டெல்லி போலீசார் கைது செய்தனர். அவரை மத்திய உளவுத் துறையினரும், டெல்லி பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரிகளும் கடந்த மூன்று நாள்களாக விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு துன்டா முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதாகவும், பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக கூறி வந்தது. இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி நகரில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் வசித்து வருவதாகத் அதிகாரிகளிடம் துன்டா கூறியதாகத் தெரிகிறது.

தாவூத் தலைமையில்...

தாவூத் தலைமையில்...

மேலும், தாவூத் இப்ராஹிம் தலைமையில் செயல்படும் குழுக்கள் ஆண்டுதோறும் சில ஏஜெண்டுகள் மூலம் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட்டதாக துன்டா கூறிய தகவல் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஐ.எஸ்.ஐ உதவியோடு...

ஐ.எஸ்.ஐ உதவியோடு...

பாகிஸ்தான் ராணுவ மேஜருக்கு பங்கு: "பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றும் தயீப் என்ற அதிகாரிதான் இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மூளையாகச் செயல்பட்டு வந்தார். ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள அச்சகத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படும் என துன்டா கூறுகிறார்.

மேலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக ஹமீது குல் 1987-89 வரை இருந்தார். காஷ்மீரில் உள்ள இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடம் சேர்த்து பயிற்சி பெற வைப்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்துவரும் முஜாஹிதீன்களை காஷ்மீருக்காக போராடச் செய்வதும்தான் அவரது நோக்கம் என துன்டா கூறுகிறார்.

கள்ள நோட்டுகள்:

கள்ள நோட்டுகள்:

ஐஎஸ்ஐ பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், ஹமீது குல் பயங்கரவாத இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவரை 1995-ஆம் ஆண்டு துன்டா நேரில் பார்த்த போது பாகிஸ்தான் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

வங்கதேசத்திலும், காஷ்மீரிலும் உள்ள சில பயங்கரவாத ஏஜெண்டுகள் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்குள் விநியோகிக்கப்படும். இதற்கு பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளும் உதவியாக இருந்தனர்.

அவர்களையும் மற்ற நாடுகளில் உள்ள ஏஜெண்டுகளையும் மேஜர் தயீப் ஒருங்கிணைந்து செயல்படுத்தினார்.

பயங்கர செயல்களுக்கு நிதி

பயங்கர செயல்களுக்கு நிதி

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர் என துன்டா கூறினார்' என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

போலீஸ் காவல் நீட்டிப்பு?

போலீஸ் காவல் நீட்டிப்பு?

துன்டாவின் போலீஸ் காவல் இன்று முடிவடையவுள்ளது. அதையொட்டி, நீதிமன்றத்தில் துன்டா ஆஜர்படுத்தப்படும்போது, அவரது காவலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே போலீஸாரிடம் துன்டா அளித்துள்ள வாக்குமூலத்தில் "இந்தியாவில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்த ஹஃபீஸ் சயீத் சதித் திட்டம் திட்டியதாகவும், அவரை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்பாக நேரில் பார்த்த போது இத்தகவல் தெரிய வந்தது' என்றும் கூறியுள்ளதாகத் தெரிகிறது. எனவே, ஹஃபீஸ் சயீத் தொடர்பாக துன்டாவிடம் இருந்து கூடுதல் தகவல் பெற முடியும் என டெல்லி போலீஸார் நம்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+