ஃபுகுஷிமா அணுஉலையில் இருந்து மீண்டும் 300 டன் கதிர்வீச்சு கழிவுநீர் கசிவு

கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியின் போது அங்குள்ள ஃபுகுஷிமா அணுஉலை கடும் பாதிப்புக்குள்ளானது. இதனையடுத்து, இந்த அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அணு உற்பத்தி நடந்து வரும் ரியாக்டர்களை குளிர்விக்க தற்காலிக முகாம்களை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஈடுபட்ட 10 தொழிலாளர்கள் கடந்த 12-ம் தேதி கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களின் முகம் மற்றும் தலை முடியில் கதிர்வீச்சு தாக்குதல் காணப்பட்டதாக டோக்கியோ மின்சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளார்.
சிறிய அளவிலான இந்த கதிர்வீச்சு அணு உலை பகுதியில் படிந்துள்ள தூசின் மூலம் ஏற்பட்டிருக்கலாம் என கூறும் அதிகாரிகள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கைவிடப்பட்ட ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து வீரியம்மிக்க கதிர்வீச்சு கலந்த சுமார் 300 டன் கழிவு நீர் தடுப்பு தொட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளதாக டோக்கியோ மின்சக்தி நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
பாதுகாப்பான உலோக தொட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் எப்படி வெளியேறியது? எந்த தொட்டியில் இருந்து வெளியேறியது என்பது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தொட்டிகளில் இருந்து வெளியேறிய நச்சுநீர், அணு உலையை சுற்றியுள்ள நிலப்பரப்பில் தேங்கி நிற்கிறது. ஏராளமாக மணல் மூட்டைகளையும் கடந்து பாய்ந்து வந்து தேங்கியுள்ள கழிவு நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் இரைத்து மீண்டும் அணுஉலை தொட்டியில் சேகரிக்கும் முயற்சியில் ஏராளமாக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications