காட்டுக்குள் ஒதுங்கிய ஜோடிக்கு நேர்ந்த கதி... கொடூரமாக கொலையான பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: காட்டுக்குள் தனிமையாக இருக்க விரும்பி ஒதுங்கிய ஒரு ஆணும், பெண்ணும் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்தப் பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். அந்த ஆண் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

இவர்கள் தனிமையில் ஒதுங்குவதைப் பார்த்த யாரோ சிலர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்றும் அந்த ஆணின் வாயில் விஷத்தை ஊற்றி விட்டுப் போயிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

திருவரங்குளம்

திருவரங்குளம்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தைல மரக் காட்டில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

30 வயது ஆண் - பெண்

30 வயது ஆண் - பெண்

பிணமாகக் கிடந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் சுமாராக 30 வயது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிப்பிடித்த நிலையில்

கட்டிப்பிடித்த நிலையில்

அந்தப் பெண்ணும், ஆணும் கட்டிப்பிடித்த நிலையில் பிணமாகக் கிடந்தனர். பெண்ணை பல இடங்களில் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துள்ளனர். ஆணின் உடலில் காயமே இல்லை.

கொத்தக்கோட்டை குமரசேன்

கொத்தக்கோட்டை குமரசேன்

அந்த ஆணின் பெயர் கொத்தக்கோட்டை குமரேசன் என்று தெரிய வந்துள்ளது. இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தாராம். திருமணம் ஆகவில்லை. அவருடன் கிடந்த பெண் உள்ளூரைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரை, குமரேசன்தான் திருப்பூரிலிருந்து கூட்டி வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

லோடு ஆட்டோவின் தடயம்

லோடு ஆட்டோவின் தடயம்

இவர்கள் கிடந்த பகுதியில் லோடு ஆட்டோ வந்து போன தடயத்தை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் தனியாக இருப்பதைப் பார்த்த ஏதோ ஒரு கும்பல் வந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+