மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஒட்டகம் மரணம்: பக்தர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒட்டகமான மீனாட்சி உடல்நலக்குறைவால் மரணமடைந்தது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஒட்டகங்கள் பராமறிக்கப்பட்டு வருகின்றன. கோவில் திருவிழாக்கள், சித்திரை திருவிழா, திருக்கல்யாணம், தேரோட்டம் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்த மீனாட்சி என்ற ஒட்டகம் இன்று காலையில் மரணமடைந்தது. அந்த ஒட்டகத்திற்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2008ம் ஆண்டு பார்வதி என்ற 10 வயது ஒட்டகம் உடல்நலக்குறைவினால் மரணமடைந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications