நெல்லையில் பயங்கர சப்தத்துடன் இடிந்த வீடு... வெடித்தது டெட்டனேட்டரா?
பாளையங்கோட்டை: நெல்லையில் திடீரென வீடு இடிந்து விழுந்தது. பலத்த சப்தம் வேறு கேட்டதால் வீட்டில் வெடித்தது சிலிண்டரா அல்லது டெட்டனேட்டரா என்ற பீதி கிளம்பியுள்ளது.
பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். முன்னாள் மின் வாரிய ஊழியர், இவரது மனைவி முத்துலெட்சுமி. இன்று அதிகாலை அவரது வீட்டின் அடுப்பங்கரையில் இருந்து பயங்கர சப்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கத்து வீட்டின் கதவுகள் சேதமடைந்தன .

சமையல் கேஸ்சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல கொடுக்கப்பட்டது போலீசார் மற்றும் தீயணைப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்திய போது வீட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை என தெரிய வந்தது இருப்பினும் வீட்டில் வேறு ஏதேனும் மர்மவெடி பொருட்கள் இருந்ததா? என போலீசார் விசாரணை நட்த்தினர்.
சுப்பிரமணியத்தின் மருமகன் அம்பாசமுத்திரம் பகுதியில் போர்வெல் கிணறு தோண்டும் பணியினை செய்து வருவதாக கூறப்பட்டது. அவர் மூலம் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் போன்ற வெடிபொருள் எதுவும் வெடித்து இருக்கலாமோ என்ற கோணத்தில் போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பாளையங்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸாருடன், தடய அறிவியல் துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications