குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ரூ. 1 லட்சம் பரிசு!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குழந்தைகளுக்கு மிகுந்த பாதுகாப்பு நிலவுகிறது. குழந்தை திருட்டு இங்கு அறவே இல்லை என்று பாராட்டு தெரிவித்துள்ள மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஸ்ரீகோட்லா ஜெயசூரியபிரகாஷ் ரெட்டி, இதற்காக ரயில்வே சார்பில் ரூ 1லட்சம் தொகையை பரிசாக அளிப்பதாக கூறியுள்ளார்.
ஜெயப்பிரகாஷ் ரெட்டி நேற்று சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சென்டிரல் ரயில் நிலையப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்துப் பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது..

81 சங்கிலிப் பறிப்பு
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 81 சங்கிலிப் பறிப்புச் சம்பவங்களி்ல் துப்பு துலக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருட்டே இல்லை
இந்த ரயில் நிலையத்தில் குழந்தைத் திருட்டு என்பதே இல்லை. இது பாராட்டுக்குரியது.

இந்தா பிடி ரூ. 1லட்சம்
இதற்காக ரயில்வே சார்பி்ல சென்டிரல் ரயில் நிலையத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும்.

நல்லா பராமரிக்கிறாங்களே..
ரயில் நிலையத்தை நன்றாகப் பராமரிக்கிறார்கள். அது பாராட்டுக்குரியது.

லெவல் கிராசிங்குகள் நீக்கப்படும்
சென்னை நகருக்குள் மட்டும் 35 இடங்களில் லெவல் கிராசிங் உள்ளன. 6 அல்லது 7 ஆண்டுகளுக்குள் இவை அனைத்தும் சுரங்க பாதைகள் அல்லது மேம்பாலங்களாக மாற்றப்படும்.

தாம்பரத்தில் 3வது முனையம்
சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ஆகிய சந்திப்புகளுடன் தாம்பரத்தில் புதிய முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.

தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்தோடு
தாம்பரம் முனையம் வந்ததும் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் இங்கேயே நின்று புறப்பட ஏற்பாடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர்ப்பு நிலவி வரும் போதிலும் ரயில்வே நிர்வாகம் இந்தத் திட்டத்தை தொடர்ந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications