For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி.. சென்னையிலிருந்தபடி தொடங்கி வைத்தார் ஜெ.

Google Oneindia Tamil News

சென்னை: தனது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ரூ. 100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்டப் பள்ளியை முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னையிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் அதில் சேர்ந்துள்ள 7 மாணவ, மாணவியருக்கு அட்மிஷன் உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.

இதுதொடர்பாக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு...

முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அக்ரவால் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் மேம்படுத்தப்பட்ட சட்ட உயர்கல்வி வழங்கப்படும் வகையில் ஸ்ரீரங்கம் வட்டத்தில் தேசிய சட்டப் பள்ளி நிறுவப்படும் என்று ஜெயலலிதா தலைமையில் 7.7.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உயர் தரத்துடன் கூடிய சட்டக் கல்வி அளிப்பதற்கு ஏதுவாக 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி தேசிய சட்டப் பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் வேந்தராகவும், சட்டத் துறை அமைச்சர் இணை வேந்தராகவும் செயல்படுவார்கள்.

இவ்வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலூகாவிலுள்ள நவலூர்குட்டப்பட்டுவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 4,55,658 சதுர அடி அளவில் தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி அமைக்கப்படுவதற்கான பல்வேறு மாதிரி வடிவமைப்புகளை ஆய்வு செய்து, அதில் சிறப்பான ஒன்றை தெரிவு செய்த முதல்வர் ஜெயலலிதா 13.2.2012 அன்று இதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கு 2013-2014ஆம் கல்வி ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியருக்கென ஒதுக்கப்பட்டுள்ள 10 இடங்களையும் சேர்த்து, 100 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்.

ஸ்ரீரங்கத்தில் நிறுவப்பட்டுள்ள இந்தப் புதிய தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் ராஜேஷ் குமார் அகர்வால் முன்னிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, 7 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.

மேலும் நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால் 5 மாணவ, மாணவியருக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி

இதேபோல திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள ரூ. 73.16 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையையும் முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

Jaya inaugurates National Law School in Sri Rangam
English summary
Implementing a 2011 Cabinet decision, Tamil Nadu Chief Minister Jayalalithaa Thursday inaugurated the Rs 100 crore National Law School at her native constituency Srirangam. The Chief Minister inaugurated the institution through video-conferencing in the presence of Justice Rajesh Kumar Agrawal, Acting Chief Justice of Madras High Court, from here. Similarly, she also inaugurated the Tiruvannamalai Medical College Hospital, constructed at an estimated Rs 73.16 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X