யோசிக்காமல் பேட்டை காற்றில் சுற்றும் உர்வில் படேல்.. SRH பொறியில் எலி போல் சிக்கிய சிஎஸ்கே வீரர்!
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் அதிரடி வீரர் உர்வில் படேல் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பவுலர்கள் என்ன திட்டத்துடன் பவுலிங் செய்கிறார்கள் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், காற்றில் பேட்டை சுழற்றி உர்வில் படேல் விக்கெட்டை தாரை வார்த்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் நீக்கப்பட்டு அவரது இடத்தில் அகீல் ஹொசைன் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்பின் சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

நிதீஷ் குமார் ரெட்டி வீசிய முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து சஞ்சு சாம்சன் கணக்கை தொடங்கினார். அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் பேட் கம்மின்ஸ் பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த உர்வில் படேல் கம்மின்ஸ் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சரை விளாசினார். இதனால் பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உர்வில் படேல் விக்கெட்டை வீழ்த்த ஐதராபாத் அணி சரியாக திட்டமிட்டது. அவரின் பலம் லெக் சைடில் என்பதை அறிந்து, 2 ஃபீல்டர்களை கம்மின்ஸ் நிறுத்தினார். அதேபோல் உர்வில் படேல் பேட்டை காற்றில் சுழற்றுவதை கம்மின்ஸ் கணித்தார். இதனால் உடனடியாக ஷகிப் ஹுசைன் கைகளில் கொடுத்தார். முதல் பந்திலேயே வேகத்தை குறைத்து வீசிய ஷகிப் ஹுசைன், கட்டரை கொஞ்சம் தாழ்வாகவே வீசினார்.
அப்போதே தனக்கான திட்டத்தை ஐதராபாத் அணி வைத்திருப்பதை உர்வில் படேல் உணர்ந்திருக்க வேண்டும். ஆனாலும் கொஞ்சம் கூட சிந்திக்காமல் பேட்டை காற்றில் வீசினார். இதன்பின் 3வது பந்தை கொஞ்சம் ஸ்லோயர் கட்டராக வீசி உர்வில் படேலை போல்ட் எடுத்தார். இதனால் ஸ்டம்புகள் சிதறியது. ஒட்டுமொத்த சேப்பாக்கம் மைதானமும் மயான அமைதிக்கு சென்றது.
பேட் கம்மின்ஸ் வைத்த பொறியில் ஒரு எலி போல் உர்வில் படேல் சிக்கினார். கொஞ்சம் ஃபீல்டிங் மற்றும் பவுலிங் மாற்றங்களை கணித்திருந்தாலே உர்வில் படேலால் எளிதாக களத்தில் தாக்குப்பிடித்திருக்க முடியும். அத்தனை பந்துகளையும் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற எண்ணமே உர்வில் படேலின் விக்கெட்டுக்கு காரணமாக அமைந்தது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications