“முள்ளிவாய்க்கால் நினைவுகளை நாங்கள் எங்கள் இதயங்களில் சுமப்போம்” - முதல்வர் விஜய் உருக்கம்!
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி அதனை நினைவுகூர்ந்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய். "முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!" என விஜய் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. போரின் இறுதி நாட்களில், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர் நடத்தப்படாத இடம் எனக்கூறப்பட்ட முள்ளிவாய்க்காலில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் அங்கிருந்த அப்பாவி மக்கள் மீது வான் வழி, தரைவழி மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இந்த போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் போரினால் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள் பலர் இந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (மே 18) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!" எனத் தெரிவித்துள்ளார்.
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு











Click it and Unblock the Notifications