முதல்வர் விஜய்யின் 2 மதிமுக எம்எல்ஏ ஆபரேஷன்.. பதில் சொல்ல மறுத்த திருமாவளவன்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: 2 மதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு வந்தால், அவர்களை வெல்ல வைப்பது என் பொறுப்பு என்று முதல்வர் விஜய் கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளிக்க மறுத்துள்ளார். இதன் மூலமாக தவெக செயல்பாடுகள் மீது திருமாவளவனுக்கு உடன்பாடு இல்லை என்று பார்க்கப்படுகிறது.

திமுக உடனான 9 ஆண்டு கால கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. சமீப காலமாகவே தவெகவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்த வைகோ மற்றும் துரை வைகோ, தற்போது மதிமுக பொதுக்குழுவில் முடிவு எடுத்து அறிவித்துள்ளனர். இதனிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த போது முதல்வர் விஜய் ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார்.

Thirumavalavan

அதாவது, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 2 மதிமுக எம்எல்ஏ-க்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தால், அவர்களின் வெற்றி எங்கள் பொறுப்பு என்று கூறி இருக்கிறார். இதன்பின் மதிமுக எம்எல்ஏ-க்களான செந்தில் செல்வன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோருடன் வைகோ ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆனால் இருவருமே பிடி கொடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இத்தனை நாட்களாக அதிமுக எம்எல்ஏ-க்கள் அவர்களாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைவதாக அக்கட்சியினர் பேசி வந்தனர். ஆனால் முதல்வர் விஜய் நேரடியாக மதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை வைகோ வெளிப்படையாக கூறியது தவெகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக மீண்டும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், வைகோ சொன்ன கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருமாவளவன், அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. திமுக கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்று பொறுப்புடன் செயல்பட்ட கட்சி விசிக.

தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியை உடைக்க பலரும் முயற்சித்தார்கள். என்னை வைத்து உடைக்க முயற்சிகள் நடந்தன. அதற்கு நான் இணங்கவில்லை. தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியை காப்பாற்றக் கூடிய வலிமை எனக்கு இல்லை. அதேபோல் மதிமுக எம்எல்ஏ-க்கள் தொடர்பான கேள்வியை மதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+