ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறியது என்பது வழக்கு. இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
கலைஞர் டிவி தொடர்பான வழக்கில் அதன் நிர்வாகிகள் ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோர் ஏற்கெனவே சாட்சியம் அளித்துவிட்டனர்.
கலைஞர் டிவியில் 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளையும் சிபிஐ சாட்சியாக சேர்த்திருந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் தமக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க முடியாது என்று கூறி சம்மனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றப் படிகளேறினார் தயாளு அம்மாள். ஒருவழியாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தயாளுவின் உடல்நிலையை சென்னைக்கு வந்து பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின்படி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து இன்று உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் தயாளு அம்மாளின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் உடல் நிலை காரணமாக டெல்லிக்கு வர முடியாத தயாளு அம்மாள், சென்னையில் அமைக்கப்படும் நீதிபதிகள் குழு முன்பு ஆஜராகி சாட்சியமளிக்க அனுமதி அளித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications