ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; அரசு வழக்கறிஞரை மாற்றக் கோரி திமுக மனு!
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரி திமுக பொதுச்செயலர் அன்பழகன் சார்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991-96ஆம் ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் ஜெயலலிதா என்பது வழக்கு. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகாரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது இறுதி கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென திமுக சார்பில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் தங்களையும் இந்த வழக்கில் வாதாட அனுமதிக்கக் கோரப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்திருந்தார்.
தற்போது திமுக பொதுச்செயலர் அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் நோக்கத்துக்கு எதிராகவே தற்போது வழக்கின் நிலை இருக்கிறது. தற்போதைய அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றிவிட்டு திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த மனு மீது வரும் திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications