ஆந்திரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆனது! 5 பேர் கவலைக்கிடம்!!
விசாகப்பட்டினம் : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பணியாளர்கள் 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்தகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுத்திகரிப்பு ஆலையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென ஆலை தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் பலர் தங்களது உடமைகளை விட்டு விட்டு அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு அகன்று சென்று விட்டனர்.

தகவலறிந்ததும் விசாகப்பட்டினம் நகரிலிருந்து ஏராளமான தீயணைப்பு வண்டிகள் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைந்தது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
இந்தத் தீ விபத்தில் முதலில் ஒரு பணியாளர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 37 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆலையின் குளிரூட்டும் பிரிவில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications