இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு பாவ்பாஜி சாப்பிட்ட சந்த் அப்துல்
மும்பை: மும்பையில் இளம் பத்திரிக்கையாளரை பலாத்காரம் செய்துவிட்டு சாவகாசமாக வீட்டில் போய் பாவ்பாஜி சாப்பிட்டுள்ளான் குற்றவாளி சந்த்.
மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்பட நிருபராகப் பணிபுரிந்து வந்த 23 வயது பெண், வியாழக்கிழமை மாலை தனது ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுப்பதற்காக மும்பை லோயர் பேரல் பகுதியில் ஆள் அரவமின்றி பாழடைந்து கிடக்கும் சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சென்றுள்ளார். அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழி மறித்தது. அப்பெண்ணின் நண்பரை தாக்கி, கட்டிப் போட்டது. பின்னர் அந்த 5 பேரும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மாலை 6-லிருந்து 6.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் இரவு 8.30 மணியளவுக்கே போலீஸ்க்கு தெரியவந்தது. முன்னதாக 8 மணியளவில் அப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களில் ஒருவரான சந்த் அப்துல் என்பவனை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு வீட்டில் போய் சாவகாசமாக வீட்டிற்குப் போய் பாப்பாஜி சாப்பிட்டது தெரியவந்துள்ளது.
ஜெய் பவானி நகரில் பாட்டியுடன் வசித்து வந்த சந்த் அப்துல்க்கு பெற்றோர்கள் கிடையாது. வியாழன்று மாலை 5.30 மணியளவில் அவனது நண்பர்கள் போன் செய்து சந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். உடனே கிளம்பி போன அவன் சில மணிநேரத்தில் திரும்பி வந்துவிட்டதாக பாட்டி கூறியுள்ளார்.
பலமுறை கெட்ட நண்பர்களுடன் சேரவேண்டாம் என்று எச்சரித்தும் கேட்காமல் அவன் இவ்வாறு செய்துவிட்டதாக கூறினான். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரும் போது பாவ்பாஜி வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டு விட்டு உறங்க போய்விட்டான் என்று அவனது பாட்டி கூறியுள்ளார்.
சந்த்திற்கு இரண்டு அண்ணன்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர். 9 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சந்த் நிலைமையை நினைத்து அவனது பாட்டி சர்னாபாய் கவலைப்படுகிறார். இளம் வயதிலேயே அவனது பெற்றோர்கள் மரணமடைந்துவிட்ட நிலையில் அவனை வளர்க்க சிரமப்பட்டதாக கூறுகிறார் பாட்டி.
கெட்ட நண்பர்களின் சவகாகம்தான் இந்த அளவிற்கு அவனை செய்யதூண்டிவிட்டதாக கூறுகிறார் பாட்டி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications