லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: சோனியா திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

Sonia rules out early Lok Sabha polls
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ரூ60 கோடி செலவில் உருவாக்கப்பட்ட தேசிய ஊடக மையத்தை பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன், ஜப்பானின் டோக்கியோவில் இருப்பதைப் போல அனைத்து நவீன வசதிகளுடன் 1.95 ஏக்கர் பரப்பளவில் ரூ60 கோடியில் இந்த தேசிய ஊடக மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, மும்பையில் பெண் போட்டோகிராபர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கவலையளிக்கிறது என்றார். மேலும் ஊடகங்கள் சில நேரங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்குவது கவலைக்குரியதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் எதுவும் நடத்தப் போவதில்லை.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+