திருப்பரங்குன்றம் அருகே ஆயுர்வேத மருந்தகத்தில் தீ.. பல லட்சம் ரூபாய் மூலிகைகள் நாசம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அருகே இன்று அதிகாலை ஆயுர்வேத மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள மூலிகைகள் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே கேரளா மாநிலத்தவருக்கு சொந்தமான ஆயுர்வேத மருந்தகம் உள்ளது. இங்கு பல மூலிகை செடிகள் மூலம் மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென ஆயுர்வேத மருந்தகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது.
உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் மூலிகை பொருட்கள் உள்ளே இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதன் காரணமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இதையடுத்து கூடுதலாக தல்லாகுளம், திருமங்கலம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் 5 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் மருந்தக குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள மூலிகை மருந்துகள், செடிகள், பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. விபத்து குறித்து திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications