மும்பை பெண் புகைப்படக்காரர் பலாத்காரம்- அத்தனை குற்றவாளிகளும் கைது
மும்பை: மும்பையில் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஐந்து குற்றவாளிகளும் சிக்கி விட்டனர். முதலில் மூன்று பேரைக் கைது செய்த போலீஸார் தற்போது கடைசி 2 பேரையும் பிடித்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே சந்த் ஷேக், சீரஜ் ரஹ்மான், விஜய் ஜாதவ் ஆகியோர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிரு்தனர். இதில் ஐந்தாவது நபரான சலீம் அன்சாரி என்பவன் டெல்லியில் வைத்துப் பிடிபட்டுள்ளான். அவனை மும்பைக்குக் கொண்டு வந்துள்ளனர் போலீஸார்.

இவன்தான் அந்த 22 வயது பெண் புகைப்பட பத்திரிக்கையாளரை பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று மற்ற நான்கு குற்றவாளிகளையும் தூண்டி விட்டவன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை மும்பை புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த நான்காவது குற்றவாளியான காசிம் பங்காலி என்பவனை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். குற்றச் செயல் நடந்த சக்தி மில்ஸ் அருகிலேயே இவன் பதுங்கியிருந்துள்ளான்.
இவன்தான் அந்தப் பெண்ணை மிகவும் மோசமாக பலாத்காரம் செய்தவன். 20 வயதாகும் இவன் அப்பெண்ணை 2 முறை பலாத்காரம் செய்துள்ளான்.
இதற்கிடையே, முற்றிலும் பெண் மருத்துவர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்துக் கண்காணித்து வருகிறது. அப்பெண் மிகுந்த தைரியத்துடனும், திடமான மன நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்டாலும் உடல் நிலை குணமானவுடன் மீண்டும் பணிக்குத் திரும்ப காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications