விஜயகாந்த் 61.. தந்தி அடித்து ராகுல் காந்தி வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 61வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விஜயகாந்த்துக்கு இன்று 61வது பிறந்த நாளாகும். தனது மணிவிழாவை மனைவி பிரேமலதாவுடன் திருப்பதி கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வழிபட்ட அவர் வழக்கம் போல எளிமையாக இன்று பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Rahul and Vijayakanth

அவருக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தந்தி அனுப்பி விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில்தான் தலைவா பட சிக்கலிலிருந்து மீண்ட நடிகர் விஜய்யும், விஜயகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+