விஎச்பியின் அயோத்தியா யாத்திரை- டொகாடியா, அசோக் சிங்கால் கைது
லக்னோ: அயோத்தியை நோக்கிய யாத்திரையை விஸ்வ இந்து பரிஷத் தொடங்கிய நிலையில் அதன் தலைவர்களான பிரவீன் டொகாடியா மற்றும் அசோக் சிங்கால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பிரவீன் டொகாடியா இன்று காலை கைது செய்யப்பட்டார். தடை உத்தரவை மீறி சரயு நதியில் அவர் வழிபாடு நடத்த முயன்றபோது அவரைக் கைது செய்தனர் போலீஸார்.

அதேபோல விஎச்பி தலைவர் அசோக் சிங்கால் லக்னோ வி்மான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரைக் கைது செய்த போலீஸால் அவர் டெல்லிக்குத் திருப்பி அனுப்ப்பபடுவார் என்று தெரிவித்துள்ளனர்.
அயோத்தி முழுவதும் மிகப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய இடத்திற்குள் யாரும் புகுந்து விடாத வகையில் தீவிர பாதுகாப்பும், கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அயோத்தியாவின் மணிராம் செளனி அகடாவிலிருந்து யாத்திரையைத் தொடங்கியிருப்பது ராம் ஜென்மபூமி நியாஸ் கமிடச்டித் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் அறிவித்துள்ளார். ஆனால் அவரையும் பின்னர் போலீஸார் கைது செய்தனர்.
அயோத்தியில் கடந்த 2 நாட்களாகவே பதட்டம் நிலவி வருகிறது. சிறு சிறு குழுக்களாக விஎச்பியினர் அயோத்தியில் நுழைய முயற்சிப்பதும் அவர்களைப் போலீஸார் கைது செய்வதுமாக உள்ளது.
அயோத்தியில் 8000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளு.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications