''நான்தான் பர்ஸ்ட்.. நான்தான் பர்ஸ்ட்...!!!''

Subscribe to Oneindia Tamil

Thangabalu
திருச்சி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட வேண்டும் என்று முதல் முறையாக சொன்னது நான்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு.

திருச்சியில்நடந்த இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாமில் தங்கபாலு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் தொண்டர்கள் 10 சதவிகிதம் பேர் நேரடியாகவும், காந்தியின் கொள்கைக்கு ஆதரவானவர்கள் 10 சதவிகிதம் பேரும் இருக்கிறார்கள். மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியை சற்றே குறைத்திருக்கிறது. மீண்டும் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதலிடத்துக்கு வரும்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது நான்தான். அதன்பிறகு பலரும் இதே கருத்துக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

ஒரு 5 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியை தனியே செயல்பட விட்டால் நமது வளர்ச்சியைக் காண முடியும். காங்கிரஸ் கட்சியின் மீதும், காங்கிரஸ் ஆட்சியின் மீதும் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் நம்மை வீழ்த்தும் சதித்திட்டம்தான் என்பதைப் புரிந்து கொண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றார் தங்கபாலு.

தங்கமான ஐடியாதான்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+