அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக் கொலை: துப்பு கொடுப்போருக்கு ரூ. 2.5 லட்சம் பரிசு
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலிபோர்னியாவில் கொலை செய்யப்பட்ட இந்தியர் மன்பிரீத் குமான் சிங் வழக்கு குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ. 253,429.99 பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மஜ்கி கிஷேவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் மன்ப்ரீத் குமான் சிங்(27). அவர் கலிபோர்னியா சவுத் லேக் தஹோவில் உள்ள கேஸ் ஸ்டேஷனில் கிளார்க்காக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 6ம் தேதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளி
யை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
கேஸ் ஸ்டேஷனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த குற்றவாளியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் குற்றவாளி தனது முகத்தை துணியால் மறைத்துள்ளார்.
இந்நிலையில் குற்றவாளி குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.253,429.99 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மன்ப்ரீத்தின் உடல் இந்தியாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மன்ப்ரீத் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications