தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவின் கூட்டாளி அபு பக்கர் மே. வங்கத்தில் கைது!
மால்டா: லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவனான அபு பக்கர் மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
டெல்லியைச் சேர்ந்த அப்துல் கரீம் துண்டா, பாகிஸ்தானுக்கு சென்று லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் இணைந்து கொண்டார். பின்னர் இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்த உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அண்மையில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து துண்டா, ஏராளமான ஒப்புதல் வாக்குமூலங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. துண்டா கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு வங்க மாநிலம் வடக்கு டினாஞ்பூர் அருகே முகமது அலாவுதீன் என்பவர் கள்ள நோட்டுகளுடன் சிக்கினார்.
இந்நிலையில் மால்டாவில் இன்று பிற்பகல் துண்டாவின் மற்றொரு கூட்டாளியான அபு பக்கர் சிக்கியிருக்கிறான். அவனிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications