18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன் மனம் ஒத்து செக்ஸ் வைத்தால் தப்பில்லையாம்!
டெல்லி: 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணுடன், அவரது சம்மதத்துடன் செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாகாது என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாலில் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) கூறுகிறது.
இந்த டெல்லி கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.
இந்த சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் சம்மதம் இருந்தால் அவர்களுக்கு இடையிலான உடல் ரீதியான உறவு குற்றச் செயலாகாது என்று கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது.

டீன் ஏஜ் செக்ஸுக்கு முழுமையாக தடை கிடையாது
இதுதொடர்பாக டெல்லி மகளிர் ஆணையமும், டெல்லி காவல்துறையும் தாக்கல் செய்திருந்த மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது. இவர்கள் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவில், 18 வயதுக்குட்பட்டவர்கள் மனம் ஒத்து செக்ஸ் வைத்தாலும் கூட அது குற்றச் செயல் என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும், பாக்சோ சட்டத்தையும் அவர்கள் இதுதொடர்பாக மேற்கோள் காட்டியிருந்தனர்.

தடை செய்ய முடியாது
இதை விசாரித்த நீதிபதி தர்மேஷ் சர்மா பிறப்பித் உத்தரவில், இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இருந்தால் 18 வயதுக்குட்பட்டவர்கள் தங்களது உடல் ரீதியான மகிழ்ச்சியை அனுபவிக்க முழுமையான தடை விதித்தது போலாகி விடும்.

பொறுப்புணர்ந்து நடிக்க வேண்டும்
அதேசமயம், அனைவரும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். 18 சவயதுக்குக் கீழ் உள்ளவர்கள் செக்ஸ் வைத்துக் கொண்டால் மன ரீதியாக, சமூக ரீதியாக, உடல் ரீதியாக ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வரலாம். பாதுகாப்பான உடல் உறவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்றார் அவர்.

18 வயதுக்குட்பட்டோர் சிறார்கள்
பாக்சோ சட்டத்தின்படி 18 வயதுக்குக் கீழ் உள்ள ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி சிறார்களாகத்தான் கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மதித்தால் குற்றமில்லை
பாக்சோ சட்டம் மேலும் என்ன சொல்கிறது என்றால், 18 வயதுக்குக் கீழ் இருந்தாலும் கூட ஒரு பெண் மனம் ஒத்து செக்ஸ் வைத்துக் கொண்டால், உடல் ரீதியான வன்முறை இல்லாத நிலையில், செக்ஸ் வைத்துக் கொண்டால் அது குற்றமாக கருதப்பட முடியாது என்று சொல்கிறது.












Click it and Unblock the Notifications