சாதிபெயரை கூறி திட்டிய இன்ஸ்பெக்டர்: எஸ்.பி ஆபிசில் வந்து காக்கிச் சட்டையை ஒப்படைத்த போலீஸ்
விழுப்புரம்: சாதிப்பெயரை சொல்லி இன்ஸ்பெக்டர் திட்டியதால் காவலர் பணியே வேண்டாம் என கூறி, காவலர் ஒருவர் தன் சீருடைகளை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் காவரலாக பணிபுரிபவர் ரமேஷ். திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் பாபு, தன்னை சாதி பெயரை கூறி திட்டியதாலும், அபாண்டமான குற்றசாட்டுகளை கூறுவதாலும் காவலர் பணியே வேண்டாம் என்று கூறி தன் காவல் சீருடைகளை விழுப்புரம் எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வந்திருந்தார்.
விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் இருந்த காவலர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் திருநாவலூர் காவல் நிலையத்தில் காவலராக சேர்ந்ததிலிருந்து ஆய்வாளர் ரமேஷ் பாபு என் மீது வெறுப்புணர்வுடன் இருந்தார். என் சாதி பெயரை செல்லி அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தார். என் மீது எந்த தவறும் அவரால் கண்டுபிடிக்க முடியாததால், என் இருசக்கர வாகனத்தில் ஒட்டியிருந்த சேகுவேரா படத்தை நீக்க சென்னார். நானும் படத்தை அழித்துவிட்டேன்.
ஆனால், இன்று காலை என் வாகனத்தை தன்னிடம் ஒப்படைக்க சொன்னார். "இது அரசு வாகனம் இல்லை, அதனால் உங்களிடம் ஒப்படைக்க முடியாது!" என்று கூறினேன்.
இதில் கோபமடைந்து என்னை இடைநீக்கம் செய்வதாக கூறினார். அவர் என்னை இடைநீக்கம் செய்ய வேண்டியதில்லை. நானே என் காவல் சீருடைகளை எஸ்.பி.யிடம் ஒப்படைத்துவிட்டு வேலையே வேண்டாம் என்று கூற வந்துள்ளேன். இப்படிப்பட்டவரிடம் இனிமேல் என்னால் வேலை செய்ய முடியாது. அதைவிட வேலையை விட்டுவிட்டு எங்காவது போய் கூலி வேலை செய்து கூட பிழைத்துகொள்வேன்'' என்று ஆவேசமாக கூறினார்.
ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இரண்டு காவலர்கள் வந்து ரமேஷை குண்டுகட்டாக தூக்கி சென்றனர். இதனால் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகம் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications