அரசியல் இயக்கமாக உருவெடுக்கிறது காந்திய மக்கள் இயக்கம்!
சென்னை: காந்திய மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறப் போவதாக அதன் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மேடை தோறும் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு ஆதரவு தருவோம் என்று அவர் கூறி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஈழத்தில் தமிழ் இனம் படுகொலை செய்யப்பட்டபோது அதை கொச்சைப்படுத்திவிட்டு, தற்போது தனது சுயநலத்திற்காக பாஜகவில் இணைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து காந்திய மக்கள் இயக்கம் பிரச்சாரம் செய்யும்.
காந்திய மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் இயக்கமாக மாற்றப் போகிறோம். அதற்காக மாவட்டம் தோறும் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடத்தி வருகிறோம். அப்படி அரசியலில் காந்திய மக்கள் பங்கு கொண்டாலும், நான் எந்த பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications