வெங்காய விலை எவ்வளவு அதிகரித்தாலும் கவலைப்படாத பீகார் கிராமம்
பாட்னா: நாட்டு மக்கள் எல்லாம் வெங்காய விலையை நினைத்து கவலைப்படுகையில் பீகாரில் உள்ள ஒரு கிராமம் மட்டும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படவே இல்லை.
தங்கத்தை அடுத்து வெங்காய விலை உயர்வு தான் மக்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் உள்ள பீம்சென் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த விலை உயர்வை பற்றி கவலை இன்றி உள்ளனர். காரணம் அவர்கள் பல ஆண்டுகளாக வெங்காயமே சாப்பிடுவது இல்லையாம்.
சுமார் 200 வீடுகள் உள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் பிரசாத் சிங் கூறுகையில், வெங்காய விலை உயர்வு எங்களுக்கு கவலை அளிக்கவில்லை. அதை நாங்கள் எங்கள் உணவில் பயன்படுத்துவதில்லை என்றார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ராமேஷ்வர் சிங் கூறுகையில், நாங்கள் சுமார் 200 ஆண்டுகளாக வெங்காயம் பயன்படுத்தவில்லை என்றார்.
அந்த கிராமத்தை கொடிய நோய் தாக்கியபோது இனி வெங்காயமே சாப்பிடக் கூடாது என்று 200 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்துள்ளனர். அந்த நோய் ஆண்டவனின் சாபம் என்றும், அதில் இருந்து தப்பித்து இறைவன் அருளைப் பெற வெங்காய பயன்பாட்டை நிறுத்தியதாகவும் ஒருவர் தெரிவித்தார்.
பீகாரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-60 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications