For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு- இன்று முதல் திருப்பதி எல்லையை மூடும் போராட்டம்!

By Mathi
Google Oneindia Tamil News

Tirupati to be sealed off for 48 hours
திருப்பதி: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் திருப்பதிக்கான எல்லையை மூடும் போராட்டத்தை ஒருங்கிணைந்த ஆந்திராவை கோரும் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக திருப்பதிக்கான எல்லை மூடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் திருப்பதிக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாதபடி நகரின் எல்லைகளை மூடும் போராட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் திருப்பதியில் இருந்து மேலே திருமலைக்கு வாகனங்களை இயக்கவும் திருப்பதியில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களைத் திறக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.

வெளிமாநில வாகனங்கள் திருப்பதிக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்படாது. ரயில்கள் மட்டும் ஓடும் என்றும் போராட்டக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

English summary
Tirupati JAC, the joint platform of all the Joint Action Committees spearheading the Samaikyandhra movement in Tirupati, has decided to seal the borders of the temple town for 48 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X