Madurai Murder: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் கொடூர கொலை.. நள்ளிரவில் நடுங்கும் சம்பவம்
மதுரை: சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. தவெக ஆட்சியிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையின் இதயப் பகுதியான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் வைத்து சிறுவன் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பது போல தவெக ஆட்சிக்கு வந்தும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை சரியாகவில்லை. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டிருக்கின்றன.

மதுரையில் அதிர்ச்சி
அதன் தொடர்ச்சியாக மதுரையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பார்க்கிங்கில் குபேந்திரன் என்கிற 16 வயது சிறுவன், நேற்று நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், குபேந்திரனை கூர்மையான ஆயுதங்களால் சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குபேந்திரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் சித்திரை திருவிழாவின்போது குபேரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துமணி என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அவர்களிடை யே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை
முத்துமணியுடன் ஹரி கிருஷ்ணன், முத்துகுமார், ராஜ், குட்டன் சதீஷ் ஆகியோர் இணைந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கதூண் காவல்துறையினர் தனிப்படை அமைத்து, அவர்கள் 5 பேரையும் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications