பாக்.தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள்: தமிழகத்தில் 40 கிலோ வெடி பொருட்கள் பதுக்கள்!
சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர்.

கடலோர தாக்குதல்
தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
இந்து முன்னணி தலைவர்கள்
தமிழகத்தில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானி செல்லும் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டது. மேலும் இந்து இயக்க தலைவர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்குள்ளானார்கள், பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரான ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி மாநில நிர்வாகி வெள்ளையப்பன் உள்ளிட்ட இந்து இயக்கங்களின் தலைவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
4 தீவிரவாதிகள்
தமிழகத்தில் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட 4 தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் உறுதி செய்துள்ளதால் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளனர்.
தேடுதல் வேட்டை
நால்வரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் தலைக்கு பல லட்சம் ரூபாய் அறிவித்துள்ளனர் போலீசார். 4 தீவிரவாதிகளையும் பிடிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வெடி பொருட்கள்
போலீசார் நடத்திய இந்த வேட்டையில் மேலப்பாளையத்தில் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்த முகமது காசிம், கட்டசாகுல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலப்பாளையத்தில் சிக்கியவர்களிடமிருந்து 17.5 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நவீன துப்பாக்கி
இதன் தொடர்ச்சியாக கோவையில் நவீன ரக கைத் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த அன்சாரி என்பவனும் சிக்கினான். இவர்களது கூட்டாளிகள் 3 பேரும் பிடிபட்டனர்.
கிச்சான் புகாரி
இவர்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூர் குண்டு வெடிப்பு குற்றவாளியான கிச்சான் புகாரிக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பெங்களூர் சிறையில் இருக்கும் அவனை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் துணையுடன் இங்குள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் தமிழகத்தில் மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டினார்களா? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்
வெடி பொருட்கள் பதுக்கல்
தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட 40 கிலோ வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 17½ கிலோ மட்டும் சிக்கியிருப்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் போலீசார் தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications