மும்பை பலாத்கார பெண் போட்டோகிராபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
மும்பை: மும்பையில் 5 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் போட்டோகிராபர் நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 22-ம் தேதி தெற்கு மும்பை, சக்தி மில் பழமையான கட்டடத்தில், ஆங்கிலப் பத்திரிகையின்பெண் போட்டோகிராபர், 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலத்த உள்காயங்களுடன் மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் போட்டோகிராபர், குணமடைந்து விட்டதாக நேற்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து நேற்றிரவு அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண் போட்டோகிராபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது முகத்தை எதுவும் மூடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சம்பவம் நடப்பதற்கு முன்பாக, பாழடைந்த கட்டடத்தினை, தான் எடுத்த இரண்டு போட்டோக்கள் கேமிராவில் பதிவாகியுள்ளதாகவும், அதே இடத்தில் தனது செல்போனும் காணாமல் போனதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும், சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.அங்கு, குற்றம் நடந்த முறையை போலீஸார் முன் அவர்கள் நடித்துக் காட்டினர். அதை போலீஸார் விடியோவில் பதிவுசெய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடித்துக் காட்டிய மீள் நிகழ்ச்சிகளும் ஒத்துப்போகின்றனவா? என்று போலீஸார் ஒப்பிட்டு பார்த்தனர்.
ஆதாரங்கள் சேகரிப்பு
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக, மிகவும் உறுதியான ஆதாரங்களை சேகரித்து வரும் போலீஸார், இந்த மீள் நிகழ்ச்சியின் விடியோ பதிவை முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர்.
குஜராத்தில் இருந்து வந்திருந்த மனநல மருத்துவர்கள் இருவர், கைதாகியுள்ள 5 நபர்களிடமும், குரலமைப்பு பகுப்பாய்வு சோதனையை மேற்கொண்டனர். தவிர 5 பேரின் வீடுகளிலும் போலீஸார் சோதனை நடத்தி உள்ளாடைகள் உள்ளிட்ட துணிகளை கைப்பற்றினர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து இன்னும் நிறைய ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டியுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணையில் ரகசியம் காக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications