தீவிரவாத தாக்குதல் அபாயம் -கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
நெல்லை: தமிழக கடலோர மாவட்டங்களில் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ள பின்னணியில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தைத் தொடர்ந்து கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு நிலையம், முக்கிய வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முதல் உலை இயங்க தொடங்கியுள்ளது. மின் உற்பத்தி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடலோர பகுதியில் மின் நிலையம் அமைந்துளளதால் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கும் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த ரோந்து கப்பல் தீவிரமாக ரோந்து சுற்றி வருகின்றது. அணு மின் நிலைய கடலோர பகுதிகளில் தமிழக கடலோர காவல் குழுமத்தை சேர்ந்த வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை சுற்றிலும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 3 கம்பெனி போலீசாரும், மத்திய ரிசர்வ் விரைவு படையை சேர்ந்த அதிரடி போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அணு மின் நிலைய வாளகத்திற்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படை, துணை கமண்ட் மனீஷ் சிங் தலைமையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அலுவலர்கள் மற்றும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே வெளியே செல்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications