பெண்களுக்கு பாதுகாப்பில்லையென்றால் நம்மை ஆண்கள் என அழைப்பதே கேவலம்!- மோடி
அகமதாபாத்: இந்த நாட்டில் வாழும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் நம்மையெல்லாம் ஆண்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் என்ற மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக அம்மாவட்ட மக்கள் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியது:
சீதையும், சாவித்ரியும் வாழ்ந்த தேசம் இது. ஆனால் இன்றோ நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
நான் அரசியலுக்காக இதை கூறவில்லை. நாம் வீட்டில் இல்லாதபோது நமது சகோதரிகள் தனியாக தங்கியிருக்கும் வேளைகளில் அவர்களால் பயமின்றி நிம்மதியாக இருக்க முடிவதில்லையே... ஏன் இந்த அவல நிலை?
இதே நிலை நீடித்தால், ஆண்கள் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் அர்த்தமே இல்லை. கணவன் என்று சொல்லிக்கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. இதைவிட செத்துப் போகலாம்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு காரணம் பெண்களே என வக்கிரபுத்தி படைத்த சிலர் கூறி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் பெண்கள் காரணமல்ல. ஆண்களுக்குள் இருக்கும் கேவலமான புத்திதான் காரணம்.
இதைப்போன்ற கேவலமான எண்ணங்களை எதிர்த்து போராட இந்த சமூகம் முன்வர வேண்டும்.
பெண்களை தவறாக சித்தரிப்பதும், பயன்படுத்துவதும் இந்த சமூகத்தின் மீது படிந்துள்ள நீங்காத கரையாக தொடர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த கரையை நீக்க நாம் கூட்டுப் பொறுப்புடன் போராட வேண்டிய வேளை இது," என்றார் மோடி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications