செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைக்காதீங்க.. 'பொசுங்கிருமாம்'!
மும்பை: செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைத்தால் விதைப் பை சேதமாகிப்போய் விடும் என்று மும்பை ஐஐடி பேராசிரியர் டாக்டர் கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
செல்போன் என்பது ஒரு குட்டி பகவதியாம்.. ஸாரி ஸாரி.. குட்டி மைக்ரோவேவ் அடுப்பு போலவாம். பொசுங்கிப் போய் விடுமாம் விதைப் பை.
மும்பையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில்தான் கிரீஷ் குமார் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

ஜூஹி சாவ்லா
இந்தக் கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடிகை ஜூஹி சாவ்லா உள்ளிட்டோரும் அதில் அடக்கம்.

மொபைல் போன் டவர்களால் புற்றுநோய் ஆபத்து
வீடுகளுக்கு அருகில் மொபைல் போன் டவர்களை வைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வருவதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

காபி .. ஊறுகாய் மாதிரி..
எப்படி அதிகம் காபி சாப்பிட்டால், ஊறுகாய் சாப்பிட்டால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் உள்ளதோ அதேபோல கதிர்வீச்சாலும் புற்று நோய் பாதிப்பு அதிகம் வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாக கூறினார் கிரீஷ் குமார்.

காது சவ்வு கிழிஞ்சிடும்...
தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்தால் காது சவ்வு கிழிந்து காது ஓட்டையாகிப் போய் விடுமாம். மேலும் காது நரம்புகளும் பாதிக்கப்பட்டு காது கேக்காதாம்...

மலட்டுத்தன்மையும் வந்து சேரும்
தொடர்ந்து செல்போனை பயன்படுத்தி வந்தால் மலட்டுத்தன்மையும் வருமாம். குறிப்பாக பேன்ட் பாக்கெட்களில் போனை வைத்திருந்தால் அது ஆண்களின் விதைப் பையை காலி செய்து விடுமாம். இதனால் வெறும் பைதான் இருக்கும்.. குழந்தைப் பேறுக்கு குட்பை சொல்லி விட வேண்டியதுதான் என்றும் கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டது.

கதிர்வீச்சு நல்லதுதான்.. ஆனால்
பாபா அணு ஆய்வுக் கழகத்திலிருந்து வந்திரு்த ஸ்ரீகுமார் பானர்ஜி என்பவர் பேசுகையில் புற்றுநோயாளிகளுக்கு கதிர்வீச்சு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் அது எந்த அளவுக்கு உடலுக்குள் போக வேண்டுமோ அது மீறி விடக் கூடாது. மீறும்போதுதான் ஆபத்து என்றார்.
இனிமேல் பேன்ட் போடும்போது அதில் பர்ஸை மட்டுமே வையுங்கள்.. செல்லை வச்சுராதீங்க..
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications